செட்டிநாடு முட்டை தொக்கு

Time: 60 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • முட்டை - 4,
  • பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்,
  • கரம் மசாலா பொடி - 1 ஸ்பூன்,
  • பல்லாரி - 1,
  • தக்காளி - 2,
  • இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்,
  • மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்,
  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
  • கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை :

பல்லாரி, தக்காளியை நீளவாக்கில் மெலிதாக வெட்டவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். முட்டையை  வேக வைத்து ஓட்டை உடைத்து 2 ஆக வெட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பல்லாரியை போட்டு வதக்கவும். பல்லாரி நன்றாக வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், கரம்மசாலா தூள், உப்பு போட்டு நன்கு வதக்கி 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் சுண்டி வரும்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து, முட்டையை போட்டு உடையாமல் கிளறவும். மசாலா நன்றாக வதங்கியதும் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும். சுவையான முட்டை தொக்கு தயார்.

Post a Comment

0 Comments